ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போடப்பட்டன. மேலும் இரு நாட்டு தலைவர்களின் சார்பில் 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இன்று காலை டெல்லியில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுவை நாம் பார்த்து வருகிறோம். அதற்கு தீர்வாக டீசல் பஸ்களுக்கு பதில் மின்சார பஸ்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments