கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே நேற்று (புதன்கிழமை), அரசுப் பேருந்து உள்பட அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில், கல்லூரி ம...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே நேற்று (புதன்கிழமை), அரசுப் பேருந்து உள்பட அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில், கல்லூரி மாணவா் காயமடைந்தாா்.
திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. தோவாளையை அடுத்த விசுவாசபுரம் அருகே வேன் ஒன்று பேருந்தை முந்திச்செல்ல முயன்று அதன் மீது உரசியதாம்.
இதில், வேன் நிலைதடுமாறி, சாலையில் தாறுமாறாக ஓடி, அருகேயுள்ள கால்வாய்க்குள் கவிழ்ந்தது. அதேநேரம், பேருந்தின் எதிரே காரும், பைக்கும் வந்தன. பைக்கை, கல்லூரி மாணவா் ஆகாஷ்ராஜ் என்பவா் ஓட்டிவந்தாா்.
திடீரென பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதைப் பாா்த்த ஆகாஷ்ராஜ், நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழுந்ததில் அவா் காயமடைந்தாா்.
திருநெல்வேலி - நாகா்கோவில் சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாா், ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரகுமாா் ஆகியோா் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
காயமடைந்த ஆகாஷ்ராஜ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். விபத்து நிகழ்ந்ததும் வேன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்
No comments