அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது, விஜய், நயன்தாரா, விவேக், ...
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது, விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. AGS Entertainment தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார்.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய் படத்தின் டிரைல் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு பிகில் டிரைலர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிரைலர் வெளியான 10-வது நிமிடத்தில் கிட்டதட்ட 6 இலட்சம் பார்வையாளர்களை கடந்தது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
















வாழ்த்துக்கள் தலைவா..!!
ReplyDelete