நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகள் மிக மோசமாக காணப்படுகிறது. இ...
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம்
நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகள் மிக மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு திமுக சார்பில் தெருமுனை கூட்டம் நடந்தது. வட்ட செயலாளர் எம்.ஜே,ராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். கோலப்பன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ பேசும்போது:-

நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய பாதாள சாக்கடை பணி இதுவரை முழுமையாக நிறைவு பெறவில்லை. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றொரு புரம் சாலைகளில் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்துகூட செல்லமுடியவில்லை.

மாநகராட்சி ஆணையர் வரிகள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். அதே நேரத்தில் சாலை சீரமைப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தவில்லை. இதை கண்டித்து வார்டு வாரியாக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. கடைசியில் மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக சார்பில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதற்குள் ஆணையர் 52 வார்டுகளிலும் சாலைகளை சீரமைப்பதுடன் குடிநீர் விநியோகத்தையும் முறைபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெர்னார்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், அணி செயலாளர்கள் சிவராஜ், பன்னீர்செல்வம், சதாசிவம், சாய்ராம், வக்கீல் உதயகுமார், டாக்டர் வள்ளுவன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ்பாபு, குட்டிராஜன், நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூது, பெஞ்சமின், அழகம்மாள், நிர்வாகிகள் தில்லைசெல்வன், லதா, சி.டி.சுரேஷ், ஜலீல், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
















No comments