Vivekananda Memorial Rock விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. ...
Vivekananda Memorial Rock
விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்தி சென்று அங்கிருந்த பாறையில் 3 நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கடலின் நடுவில் தவம் இருந்த பாறையில் 1970ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு விவேகானந்தரின் முழுஉருவ வெண்கலச் சிலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது. இது விவேகானந்த கேந்திரியா பராமரிப்பில் உள்ளது.
இங்கு பகவதி அம்மனின்ஒற்றைக் கால் தடம் இருக்கிறது என்று இந்துக்களாலும், முதல் மனிதன் ஆதாமின் கால் தடம் என்று கிறித்தவர்களாலும் நம்பப்படும் ஒரு சிறிய கால் பாதம் போன்ற தடம் இப் பாறையில் பதிவாகியிருக்கிறது. இதன் மேல் தற்போது திருபாத மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
கரையிலிருந்து இம் மண்டபத்தை அடைய படகு போக்குவரத்தை தமிழக சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் பூம்புகார் கப்பல் கழகம் என்ற பெயரில் நடத்தி வருகின்றது
No comments