நோக்கியா 110 மற்றும் 112 பட்ஜெட் விலையில், வேகமான இணையத் தேடல் பெறும் வகையில் இரண்டு மொபைல் போன்களை நோக்கியா வெளியிட்டுள்ளது. நோக்கியா 110...
நோக்கியா 110 மற்றும் 112
1.Intex V Show Projector Phone 8810
Mini theatre 8809
பட்ஜெட் விலையில், வேகமான இணையத் தேடல் பெறும் வகையில் இரண்டு மொபைல் போன்களை நோக்கியா வெளியிட்டுள்ளது. நோக்கியா 110 மற்றும் நோக்கியா 112 ஆகிய இந்த இரண்டும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தருவதோடு, பன்னாட்டளவில் பிரபலமான கேம்ஸ் மற்றும் நோக்கியா அப்ளிகேஷன் ஸ்டோருக்கும் இணைப்பு தருகின்றன. இதில் தரப்பட்டுள்ள நோக்கியா பிரவுசர் இணைய தளங்களை கம்ப்ரஸ் செய்து தருவதால், டேட்டா இறக்கம் வெகுவாகக் குறைகிறது. இதனால், மொபைல் இன்டர்நெட் செலவு குறைகிறது.
நோக்கியா 112 மொபைலில் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி இணைத்தே தரப்பட்டுள்ளது. தரமான கேமரா இருப்பதால், படங்களுடன் முகவரிகளை அமைக்க முடிகிறது. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு சிம்களை இவற்றில் இயக்க முடிகிறது. எளிதில் இவற்றை மாற்ற முடிகிறது. இதற்கென போனை ஸ்விட்ச் ஆப் செய்திடவோ, பேட்டரியைக் கழட்டவோ தேவையில்லை. ஐந்து சிம்கள் குறித்த தகவல்களை இதில் செட் செய்திட முடியும். எனவே, நகரத்து இளைஞர்களை, எப்போதும் இணைய இணைப்பில் இருக்க விரும்புபவர்களை அதிகம் கவரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
நோக்கியா 110 அம்சங்கள் 1.8 அங்குல வண்ணத்திரை, இரண்டு சிம் பயன்பாடு, நோக்கியாவின் சிரீஸ் 40 சிஸ்டம், நெட்வொர்க் இணைப்பிற்கு EDGE /GPRS, Bluetooth 2.1, WAP 1.1, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, WMV, 3GPP, AVI ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்திடும் வீடியோ, பதிவு செய்திடும் வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்பி வரையிலான உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி,1020 mAh லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம். 80 கிராம் எடையில் இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.
மேலே தரப்பட்டுள்ள அம்சங்களுடன், 1020 mAh லித்தியம் அயன் பேட்டரியுடன், 86 கிராம் எடையில், கிரே, நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நோக்கியா 112 வடிவமைக்கப் பட்டுள்ளது. இணைய தள விற்பனையில் நோக்கியா 110ன் அதிக பட்ச விலை ரூ. 2259 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )
புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.
இந்த வகையிலான மொபைல்கள் புதிய தொழில்நுட்பம் என்பதால் இன்னும் அதிகமான மாடல்கள் வரவில்லை. சிறப்பான புரஜெக்டர் சேவைக்கு என்ன வேண்டும் எனப்பார்க்கலாம். எந்த வீடியோ பார்மேட்டை (Video format) புரஜெக்டர் காட்டக்கூடியது, ஒளிப்பட பார்மேட்(Picture Formats), மொபைல் திரையளவு(Display), தெளிவான வீடியோ (Video brightness) மற்றும் தரம் போன்றவற்றைச் சோதித்து வாங்குவது நலமானது. தற்போது சிறப்பாக உள்ள புரஜெக்டர் போன்களைப் பற்றி பார்க்கலாம்.
1.Intex V Show Projector Phone 8810
இன்டெக்ஸ் நிறுவன போன்கள் வழக்கமாக இரட்டை சிம் வசதியுடையன. இதிலும் இரட்டை சிம் வசதியுடன் இரட்டை மெமரி கார்டு ஸ்லாட் (Dual Memory slot) வசதியிருக்கிறது. இரண்டிலும் தலா 8 GB வரை போட்டுப் பயன்படுத்தலாம்.
இதன் தொடுதிரையளவு 3.2”. படங்களை தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருமாம்.இதனுடன் போனை வைத்து புரஜெக்ட் செய்ய Tripod Stand தரப்படுகிறது. விலை Rs. 12000
2.Samsung Galaxy Beam i8520இது ஒரு சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வகையைச் சார்ந்தது. இதன் DLP WVGA புரஜெக்டர் சிறப்பான முறையில் படங்களைக் காட்டக்கூடியது. மேலும் இதன் 8 MP கேமராவில் படமெடுக்கும் போதே புரஜெக்ட் செய்யும் வசதியிருக்கிறது. உயர்தர HD வீடியோக்களை எடுக்கவும் உதவும்.
இது சாதாரண புரஜெக்டர் போன் மட்டுமில்லாது ஆண்ட்ராய்டு 2.1 இயங்குதளம், வை-பை, 3G, 3.7” தொடுதிரை போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை Rs. 35000
3. Spice Popcorn Projector M9000குறைந்த விலையில் தரமான வசதிகளோடு ஸ்பைஸ் நிறுவனம் பாப்கார்ன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மொபைலில் இரண்டு சிம் வசதியுள்ளது. இதில் பலவகையான வீடியோ மற்றும் ஒளிப்பட வகைகளையும் தெளிவாக காட்டக்கூடிய வசதியிருக்கிறது. லைவ் டீவி மொபைலில் பார்த்தால் அதையும் புரஜெக்ட் செய்யலாம். இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் விற்பனை நன்றாக உள்ளது. இதன் விலை 6000 ருபாய் மட்டுமே.
4.TechBerry ST 200இந்த மொபைல் போனில் இரண்டு சிம், இரண்டு மெமரிகார்ட் ஸ்லாட்கள், இரண்டு கேமரா வசதியிருக்கிறது. இதன் தொடுதிரை அளவு 3.2” ஆகும். இதன் கேமரா 2MP மற்றும் பிளாஷ் வசதி கொண்டது. இதன் 2000 mAh பேட்டரி அதிக நேரம் நீடிக்கக் கூடியது. இதன் விலை Rs. 11000
5. Intex V இண்டெக்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய மொபைலான இதில் புரஜெக்டர் காட்சியமைப்பு தெளிவாக இருக்கிறது. இரட்டை சிம் வசதி, 2.4” தொடுதிரை அளவு, 2MP கேமரா போன்ற வசதிகளையும் 3gp, avi, mp4 போன்ற வீடியோ வகைகளை காட்டும் வசதியும் கொண்டது. இதன் விலை 6200 ருபாய். இது ஸ்பைஸ் நிறுவனத்தின் பாப்கார்ன் மொபைலின் போட்டியாக கருதப்படுகிறது.
மொபைல் போன்: சில ஆலோசனைகள்
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும். பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும். உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.
அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே. விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது. சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை. மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.
ஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள்
விரைவில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இரண்டு மொபைல் போன்கள் வர இருக்கின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.
1. எல்.ஜி. சி320 இன் டச் லேடி: இதற்கு சூட்டிய பெயர் இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. அதற்கேற்ப அழகான ஸ்லைடர் வடிவமைப்பில் இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் எடை 105 கிராம். பரிமாணம் 91x63x1.4 மிமீ. இதன் மெமரி 60 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நீலம், வெள்ளை, இளஞ்சிகப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். இதன் கேமரா 2 எம்பி திறன் கொண்டது. வீடியோ பதிவு வசதியும் கொண்டது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார் இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999 ஆக இருக்கலாம்.
2. மோட்டாரோலா கிளீம்: இது ஒரு ஸ்டைலான கிளாம் ஷெல் மாடல். இரு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் 2.4 அங்குல அகலத்தில் திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, புளுடூத், 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 106x53x13.9 மிமீ; எடை 105 கிராம். இதன் திரை 240x320 பிக்ஸெல் திறனுடன் பளிச்சிடுகிறது. முகவரி ஏட்டில் 800 முகவரிகளைப் பதிந்து இயக்கலாம். உள் நினைவகம் 5 எம்பி தரப்பட்டுள்ளது. போட்டோ மூலம் அழைப்பு விடுக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ். வசதி உண்டு. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. கேமரா வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தருகிறது. 1600x1200 பிக்ஸெல்களில் காட்சி பதிவு மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., மின்னஞ்சல் வசதி உண்டு. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இயங்குகிறது. எம்பி3 பிளேயர் பல பார்மட்டுகளில் உள்ள பைல்களை இயக்குகிறது. 750 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 6 மணி 20 நிமிடம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,000.
No comments