ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான ஐஎம்டிபியில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக ரேட்டி...
ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!
கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான். இந்தியில் இந்தப் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்திலும் இந்தப் படம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது விஸ்வரூபம். இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.
ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது.
விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்…
இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் தொடர்ந்து 3வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக விஸ்வரூபம் ஓடி வருகிறது. மேலும் ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மேலும் 15 இடங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளரான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி15ம் தேதிக்குப் பி்ன்னர் மேலும் பல தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாகவும் ஐங்கரன் தெரிவித்துள்ளது. விஸ்வரூபம் படம் இங்கிலாந்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஐங்கரன் நிறுவனம், படத்திற்கு திரும்பத் திரும்ப ரசிகர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
<சும்மா கிடந்த சீனிவாசனை பவர் ஸ்டாராக்கியதன் விளைவு…!
ஏதோ ஆசைக்கு ஒரு படம் நடிக்க வந்தார் பைனான்சியல் புரோக்கராக இருந்த சீனிவாசன். வெறும் நடிகர் மட்டும் என்றால் நல்லாருக்காதே என்ற எண்ணத்தில், ஒரு உதவி இயக்குநரைப் பிடித்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் அவர் தலையில் சுமத்தி, தன் பெயரைப் போட்டுக் கொண்டார். இதைக் கேட்ட போது, ஆமா காசு கொடுத்தேன்… அந்தப் பையன் ஓகேன்னான்.. நான் இயக்குநராகிட்டேன். இதிலென்ன தப்பு என்று திருப்பிக்கேட்டார் சீனிவாசன். சீரியஸான காமெடி பீஸாக வலம் சீனிவாசனுக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் காரணமாக, பிரபல இயக்குநர்களின் படங்களில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சீனிவாசன். அதில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் குருட்டாம் போக்கில் ஓடிவிட, இப்போது அவருக்கு புதிய மவுசு.
ஏகப்பட்ட புதிய படங்களில் ஒரு பாடலுக்கு அல்லது காமெடியனாக அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த ஒரே படத்தில் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார் சீனிவாசன். காரணம் கேட்டால், “ஆமாங்க… இந்த நிலைமைக்கு வர நான் நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டேன். அதையெல்லாம் இனிமேதானே திரும்ப எடுக்கணும். அதான் சம்பளத்தை 1 கோடியாக உயர்த்திவிட்டேன். என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரே என் படத்தைப் பார்த்து பவர் பட்டையைக் கிளப்பிட்டீங்க என்றார். இது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய விருது,” என்றார்.
இப்போதைக்கு அஜீத் படம் இல்லை – நழுவிய முருகதாஸ்
அஜீத் கூப்பிட்டால் எப்போ வேண்டுமென்றாலும் படம் இயக்குவேன் என்று புயலாக புறப்பட்ட முருகதாஸ், டைம் லேது, அஜீத் படம் இப்போதைக்கு இல்லை என்று பொசுக்கென்று பின் வாங்கியிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் படம், அடுத்து சிவா இயக்கும் படம் என இந்த ஆண்டு முழுக்க அஜீத் பிஸி. முருகதாஸும் அப்படிதான். இந்தி துப்பாக்கியை முடிக்கவே ஒரு வருடம் பிடிக்கும். இப்படியொரு சூழலில் அஜீத்தும், முருகதாஸும் இப்போதைக்கு இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அதுதவிர ராஜமௌலியைப் போல மாஸ் ஹீரோ இல்லாமலே ஜெயிக்க முடியும் என்பதை காண்பிப்பதற்காக புதுமுகங்களை வைத்து காதல் படம் எடுக்கும் விஷப்பரிட்சை வேறு தனக்குத்தானே வைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். இப்படி சொந்த காசில் சூன்யம் வைக்கும் வேலையும் இருப்பதால் அஜீத்துடன் இப்போதைக்கு எந்தப் படமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
வத்திக்குச்சி எப்போ பற்றிக் கொள்ளும்ங்கிறதை பொறுத்திருந்துதான் பாக்கணும்.
No comments