குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சஜீவ்குமார் (வயது 45). இவர் 18 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு ...
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சஜீவ்குமார் (வயது 45). இவர் 18 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார், திராவிட கழகம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் அவர் பேசியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து கீழ்குளம் பகுதியை சேர்ந்த தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜெப ஜான் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் தென்காசி மாவட்டம் விரைந்து சென்று சஜீவ்குமாரை பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments