நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் சஞ்சு (வயது 29). இவர் செட்டிகுளம் சற்குணவீதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங...
நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் சஞ்சு (வயது 29). இவர் செட்டிகுளம் சற்குணவீதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கினார். அங்கு பல பெண்கள் பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நிறுவன கழிவறைக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு சுவரில் வித்தியாசமாக ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் அந்த கருவியை உற்று பார்த்தபோது அது ரகசிய கேமரா என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே சக பெண் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் இதுபற்றி சஞ்சுவிடம், பெண் ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவம் பற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கழிவறையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வந்த சஞ்சு, கழிவறையில் ரகசியமாக கேமரா பொருத்தி இளம்பெண்களை ஆபாசபடம் பிடித்தது தெரியவந்தது. கழிவறையில் இருந்த கேமராவை தனது செல்போனுடன் இணைத்து ஆபாச காட்சிகளை சஞ்சு பார்த்து வந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து சஞ்சு பயன்படுத்திய லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு அவரை செய்தனர். அதோடு சஞ்சு படம் பிடித்த ஆபாச காட்சிகளை ஏதேனும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
No comments