மண்டைக்காடு கோயிலில் ரூ.19 லட்சம் காணிக்கை மூலம் வசூலாகி உள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் ...
மண்டைக்காடு கோயிலில் ரூ.19 லட்சம் காணிக்கை மூலம் வசூலாகி உள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மாசிப் பெரும் திருவிழாவும், தொடர்ந்து 18-ம் தேதி எட்டாம் கொடை விழாவும் நடந்தது.

மார்ச் 24-ம் தேதி முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 18-ம் தேதி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. தற்போது பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த மூன்று நிரந்தர உண்டியல்கள் மட்டும் குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம், ஆய்வாளர் கோபாலன், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோயில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கமாக ரூ.19,29,357 மற்றும் தங்கம் 80 கிராம், வெள்ளி 315 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.
No comments