ராயல் என்ஃபீல்டு, ஜாவா பெனெல்லி நிறுவனங்களுக்கு சவாலாக ஹோண்டா H’Ness CB350 மோட்டார்சைக்கிள் பல்வேறு விதமான நவீனத்துவமான வசதிகளுடன் ரூ.1.90 ல...
ராயல் என்ஃபீல்டு, ஜாவா பெனெல்லி நிறுவனங்களுக்கு சவாலாக ஹோண்டா H’Ness CB350 மோட்டார்சைக்கிள் பல்வேறு விதமான நவீனத்துவமான வசதிகளுடன் ரூ.1.90 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

எச்’நெஸ் என குறிப்பிடப்பட்டாலும் அழைப்பது ஹைனெஸ் சிபி 350 என்பதே ஆகும். ஹோண்டாவின் பிரத்தியேக பிக்விங் டீலர் மூலம் விற்பனை செய்யப்பட்ட உள்ளது. மேலும் பிரத்தியேகமாக பல்வேறு ஆக்செரிஸ்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிய 350சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, எல்இடி ஹெட்லேம்ப், வாய்ஸ் கனெகட் வசதி போன்றவற்றை முன்னிலைப்படுத்துகின்றது.
புதிய 348சிசி ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 21 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 30 என்எம் பீக் டார்க் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கில் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா ஹெச்’னெஸ் சிபி 350 இரண்டு வகைகளில் கிடைக்கும் – டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியண்டில் வரவுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்ட் விலை ரூ.1.90 லட்சம் முதல் துவங்கலாம். ஆனால் உறுதியான விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. (எக்ஸ்-ஷோரூம்). அக்டோபர் மாதம் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஜாவா 42, ஜாவா கிளாசிக், பெனெல்லி இம்பீரியல் 400 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் வரவுள்ள மீட்டியோர் 350 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.
No comments