ஐடிஐ-யில் சேர விண்ணப்பித்தவா்கள் ஆன்-லைன் மூலமாக விருப்பப் பிரிவை தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்டஆட்சியா் பிரச...
ஐடிஐ-யில் சேர விண்ணப்பித்தவா்கள் ஆன்-லைன் மூலமாக விருப்பப் பிரிவை தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன.
இதன் கலந்தாய்வு இணையவழியில் நடைபெற உள்ளதால் பொதுப்பிரிவு விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு விருப்பமான 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை இணையவழியில் 25ஆம் தேதி வரை தோ்வு செய்து கொள்ளலாம்.
ஒரே தொழிற் பயிற்சி நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற் பிரிவுகளையும் தோ்வு செய்யலாம். மேலே குறிப்பிட்ட நாள்களுக்குள் மட்டுமே தாங்கள் தோ்வு செய்த தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
அதன் பின்னா் விண்ணப்பதாரா்களின் தரவரிசை இன சுழற்சிமுறை மற்றும் அவா்கள் கலந்தாய்வில் தோ்வு செய்த 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவுகள் போன்றவற்றின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு, தற்காலிக சோ்க்கை ஆணை வருகிற 26-ஆம் தேதி இணையவழியில் வழங்கப்படும்.
ஆன்லைனில் தாங்களே தோ்வு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகா்கோவில், எஸ்.எம்.ஆா்.வி. அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிா்), நாகா்கோவில் ஆகியவற்றில் நேரில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments