தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில், 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். திண்டுக்கல் மாவட...
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில், 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியை சார்ந்த காமுகன் உதயகுமார்.

இவன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த நிலையில், காதல் திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமி இது குறித்து உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி கர்ப்பமான விஷயத்தை அறிந்த காமுகன், சிறுமியிடம் பேசுவதை நிறுத்திய நிலையில், காமுகனிற்கு திருமணம் ஏற்பாடு செய்து, அங்குள்ள சமயநல்லூர் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
உதயகுமாரின் திருமணம் குறித்த விபரத்தை அறிந்த சிறுமி, திருச்சி சமயநல்லுர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், உடனடியாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு உதயகுமாருக்கு திருமணம் நடைபெற்று முடியவே, திருமண கோலத்திலேயே உதயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் உதயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
காதல் என்ற பெயரில் சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கர்பிணியாக்கி, திருமணம் என்ற போர்வையில் மற்றொரு பெண்ணை வீதியில் நிறுத்திய சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் வயதில் பெண்பிள்ளைகளின் வாழ்க்கை தடுமாறி, எதிர்காலம் கேள்விக்குறியாகும் சோகம் நாடகக்காதல் காமுகர்களால் தொடர்ந்து அரங்கேறுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
No comments