பா.ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சதீஷ்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டு...
பா.ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சதீஷ்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தின்கீழ் சிறப்பு நிதி தொகுப்புகளை வெளியிட்டார். இதன் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடையும்.
இதில் புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பதற்கான மிக சிறந்த வழி என எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
இது உலகத்துக்கே வழி காட்டும் திட்டமாக அமைந்து உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவது இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments