நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் மூலமும், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவக சுயஉ...
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் மூலமும், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவக சுயஉதவிக்குழுவினரைக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் மூலமும் நாள்தோறும் 3 வேளையும் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

காலையில் இட்லி அல்லது, வெண் பொங்கல், மதியம் வெஜிடபிள் பிரியாணி அல்லது தக்காளி சாதம் அல்லது புளியோதரை அல்லது தயிர் சாதம், இரவு சேமியா கிச்சடி அல்லது இட்லி போன்ற உணவுகள் தினமும் காலை 2 ஆயிரம் பொட்டலங்களும், மதியம் 4 ஆயிரம் பொட்டலங்களும். இரவு 2 ஆயிரம் பொட்டலங்களுமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றை சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள், ஏழை எளியவர்கள், சமைக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு தன்னார்வலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதியம் வழங்கப்படும் உணவை சத்தான உணவாக வழங்க மாநகராட்சி சார்பில் நாமக்கல்லில் இருந்து 1 லட்சம் முட்டைகள் வரவழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் வேகவைத்த முட்டையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுவரையில் கலவை சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணிதான் ஆதரவற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்பட்டு வந்தது.
சத்து மிகுந்த, நாவுக்கு சுவையளிக்கும் முட்டை பிரியாணியை ஆதரவற்றவர்களுக் கும், ஏழைகளுக்கும் வழங்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார். அதன்படி முதன்முறையாக நேற்று நாகர்கோவில் அம்மா உணவகம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றில் முட்டைப் பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின்னர் அவற்றை பொட்டலமிட்டு நாகர்கோவிலில் 4 ஆயிரம் பேருக்கு தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. முட்டைப் பிரியாணி பொட்டலங்களைப் பெற்ற ஆதரவற்றோர், ஏழைகள், சமைக்க இயலாத முதியோர், போலீசார், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ருசித்து சாப்பிட்டனர்.
No comments