குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் ஒன்று பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்களை எடுத்துவர நேற்று மாலை நாகர்கோவில், ராணி...
குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் ஒன்று பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்களை எடுத்துவர நேற்று மாலை நாகர்கோவில், ராணி தோட்டம் நோக்கி சென்றது.

பஸ்சை மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த நெல்சன் என்பவர் ஓட்டி வந்தார். வில்லுக்குறி அருகே தோட்டிக்கோடு பகுதியில் வந்தபோது, திடீரென பணிமனை பஸ்சின் ஆக்சில் துண்டாகி அருகில் உள்ள குளத்தில் பஸ் பாய்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து கிரேன் கொண்டு வரப்பட்டு பஸ்சை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















No comments