நாகர்கோவில் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர் நேற்று தனது மகள் மல்லிகாவுடன் (46) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு க...
நாகர்கோவில் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர் நேற்று தனது மகள் மல்லிகாவுடன் (46) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 3 மகன்களும், ஒரு மகளும் சேர்ந்து எனது சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டு, எனக்கு உணவு, தண்ணீர் தரவில்லை. என்னை 4 பேரும் சேர்ந்து அடிக்கிறார்கள்.
எனது மனைவி இறந்தபோது அடக்கம் செலவு செய்ய மறுத்து விட்டனர். எனது மகள் மல்லிகாதான் அடக்க செலவுகளை செய்தார். அவளுக்கு நகையோ, பணமோ, சொத்தோ கொடுக்கவில்லை.
தற்போது எனது இடத்தில் உள்ள ஒரு மரத்தடியில் படுத்து இருக்கிறேன். மழை, வெயிலிலும் மரத்தடியில்தான் படுத்து கொள்கிறேன். எனக்கு எனது மகள் மல்லிகா கடந்த 6½ ஆண்டுகளாக மருந்து, மாத்திரை, உணவு தந்து உதவுகிறார். எனது சொத்தை, 4 பிள்ளைகளும் ஏமாற்றி எழுதி வாங்கியதை மீட்டு தரும்படிகேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments