Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை: 12 பயணிகளுடன் முதல் விமானம் சென்றது

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நடந்தது. ஆன...

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நடந்தது. ஆனால் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
அங்கு போர் ஓய்ந்து அமைதி திரும்பியதால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் உள்நாட்டு போரினால் பலாலி விமானநிலையம் சேதம் அடைந்ததால் மீண்டும் விமானசேவை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 41 ஆண்டுகளாக யாழப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தடைப்பட்டு இருந்தது.
தற்போது யாழ்ப்பாணம் பன்னாட்டு விமான நிலையம் சீரமைக்கப்பட்டு விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சோதனை அடிப்படையில் ஏர்இந்தியாவின் அலையன்ஸ் விமான சேவை சென்றது.

இதையடுத்து சென்னை- யாழ்ப்பாணம் இடையே நேற்று முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவை நடைபெறும்.
சென்னையில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு 12 பயணிகளுடன் முதல் விமானம் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. நண்பகல் 12 மணிக்கு அந்த விமானம், யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடைந்தது.

பின்னர் மதியம் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளுடன் மீண்டும் அந்த விமானம் சென்னை புறப்பட்டு, பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. முதல் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான கட்டணம் ரூ.3,990 என்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வர விமான கட்டணம் ரூ.3,190 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்