Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட மகன்

நன்றி கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்கு கிருஷ்ணகிரியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு சாட்சி. கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி...

நன்றி கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்கு கிருஷ்ணகிரியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு சாட்சி.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதியின் மகன் அருண்குமார்.
அருண்குமாருக்கு திடீரென்று சிறுநீரகம் பாதிப்பு அடைந்தது. கிட்னி மாற்றுவதை தவிர வழியில்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். எப்படியாவது மகனை பிழைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருண்குமாரின் தாய் தனது கிட்னியை தானமாக கொடுத்தார். தாய் கொடுத்த கிட்னியில் அருண்குமார் உயிர் பிழைத்தார்.

அருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்த பெரியசாமி தனது மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்தார்.
ஆனால் செய்த நன்றி கூட இல்லாமல் பெற்றோரை கவனிக்காமல் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டி கொடுமைப்படுத்தினார். முதுமை காரணமாக மனம் நொந்து மனநிலை சற்று பாதிப்பு அடைந்தனர்.

மகனின் அரவணைப்புக்காக தாயும், தந்தையும் ஏங்கினார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சுக்கார மகனால் அவர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஒரு முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.

பெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அருண்குமாருக்கு தானமாக பெற்றோர் எழுதிக்கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்துக்களை அருண்குமாரிடம் இருந்து அதிகாரிகள் திரும்ப பெற்றனர். பின்னர் பெரியசாமியையும் அவரது மனைவி சகுந்தலாவையும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வ நாயகி நேரில் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
இனிமேல் அருண்குமார் எந்த காரணத்தை கொண்டும் தாய்-தந்தையரிடம் இருந்து சொத்தை அபகரிக்க கூடாது என்றும், இதையும் மீறி சொத்தை அபகரித்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக பெற்றோர் கூறுகையில், எங்கள் ஒரே மகனை நம்பி இருந்தோம். அவனுக்கு கிட்னி செயல் இழந்த நிலையில் எனது கிட்னியை தானமாக கொடுத்து பிழைக்க வைத்தோம். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை முழுமையாக எழுதி கொடுத்தோம். நிலத்தை வாங்கிய பின் அருண்குமார் வயதான எங்களை வீட்டை விட்டு விரட்டியதோடு மிகவும் கொடுமைக்கு ஆளாக்கினார்.
இதனால் முதியோர் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ததின் அடிப்படையில் தானமாக கொடுத்த மூன்று கோடி மதிப்பிலான நிலத்தை மீண்டும் எங்களிடம் வருவாய் கோட்டாட்சியர் தேவநாயகி வழங்கினார் என்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்