சவுதி ஜித்தாவில் ஹம்தானியாவில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்திய கேரளா மாநிலம் மலப்புரம் காளிக்காவு பகுதியை சேர்ந்தவர் இஷா...
சவுதி ஜித்தாவில் ஹம்தானியாவில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்திய கேரளா மாநிலம் மலப்புரம் காளிக்காவு பகுதியை சேர்ந்தவர் இஷாகலி (வயது 30).

அவர் சவுதியில் தங்கி பணியாற்றிய இடத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இணைப்புகள் வழங்க நிறுவப்பட்ட பெட்டியில் இருந்து வெளியே நீட்டியபடி நின்ற ஒரு வயர் அவர் மீது எதிர்பாராமல் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக தெரிகிறது.
இவருக்கு ஆமீனா என்ற மனைவியும், அமீன்ஷான் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. உடல் ஜித்தாவில் உள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் (அல் ஹம்ரா) வைக்கப்பட்டுள்ளது.
உடலை விரிவாக தாயகம் அனுப்பும் பணிகளை அங்குள்ள ஒரு அமைப்பு செய்து வருகின்றது.
















No comments