Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சேலத்தில் இருந்து குமரிக்கு கால்நடையாக, வாகனங்களில் வந்த மாணவர்கள்

சேலத்தில் இருந்து வாகனம், கால்நடையாக நீண்ட தூரம் பயணம் செய்து குமரிக்கு வந்த கல்லூரி மாணவர்கள், பரிசோதனைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக...

சேலத்தில் இருந்து வாகனம், கால்நடையாக நீண்ட தூரம் பயணம் செய்து குமரிக்கு வந்த கல்லூரி மாணவர்கள், பரிசோதனைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் தக்கலை பாலப்பள்ளியை சேர்ந்தவர் பபிலால் (வயது 22). இவரும், களியக்காவிளை கல்லு வெட்டான் குழியை சேர்ந்த சம்ஜித் (23) என்பவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வருகின்றனர். அங்கேயே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் 2 மாணவர்களும் சொந்த ஊருக்கு வர முடியாமல் அங்கேயே தவித்தனர். முதல் ஊரடங்கை கஷ்டப்பட்டு ஒருவழியாக சமாளித்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும், இனிமேல் இங்கு இருக்கக்கூடாது. எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி சேலத்தில் இருந்து பயணத்தை தொடங்கினர். சரக்குகளை ஏற்றி வரும் வாகனத்தை பிடித்து ஏறினர். வள்ளியூர் வரை வாகனத்தில் வந்த அவர்களுக்கு, அதன்பிறகு வாகனம் எதுவும் வரவில்லை. வெகுநேரமாக காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு இருவரும் நடக்க தொடங்கி விட்டனர். ஆரல்வாய்மொழி சோதனை சாவடிக்கு வந்த போது இருவரும் போலீசிடம் சிக்கினர். அப்போது இருவரும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர்.
பின்னர் மாணவர்களின் நிலைமையை உணர்ந்த போலீசார், கருணை உள்ளத்தோடு இருவருக்கும் காலை உணவு வழங்கினர். பின்னர் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி டாக்டர் ஜெனிபர், சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி ஆகியோர் வந்து பரிசோதனை செய்தனர்.

இதில் இருவருக்கும் எந்தவித அறிகுறியும் இல்லை என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்களை 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், உதவி சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் போலீசாரின் வாகன தணிக்கை செயல்பாட்டை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் சில ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இதே போல சோதனைச்சாவடி வழியே வரும் வாகனங்களுக்கு ஆரல்வாய்மொழி பேரூராட்சி மூலம் தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை செயல் அலுவலர் ஜெயமாலினி ஆய்வு செய்தார். அவருடன் பணி ஆய்வாளர் கமால், பணியாளர் மேகலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்