உலகம் முழுவதும் சுமார் 23 லட்சத்திற்கும் மேல் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல்...
உலகம் முழுவதும் சுமார் 23 லட்சத்திற்கும் மேல் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு மேல் 3-ம் தேதி வரை 2-ம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய தினசரி கூலிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பலவேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் ஏழை, எளியோருக்கு பலவழிகளிலும் உதவிகள் செய்து வருகிறது.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த 250 குடும்பங்களுக்கு திமுக கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் என்.சுரேஷ்ராஜன் வேண்டுகோளின் படி இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டிராஜன் தலைமையில், மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் நிஜாம் முன்னிலையில் அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

அப்போது மணவாளக்குறிச்சி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அஜித் ரகுமான் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
















No comments