சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), NRC மற்றும் NPR ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தட...
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), NRC மற்றும் NPR ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த தடியடியை கண்டித்து நாகர்கோவில், திருநெல்வேலி, கடலூர், திருப்பூர், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 200 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டங்களில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (15-02-2020) மாலை 6:45 மணி அளவில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நூற்றுகணக்கான இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

திமுக குருந்தன்கோடு கிழக்கு மாவட்ட செயலாளர் குட்டிராஜன், எஸ்டிபிஐ சாதிக் அலி, மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, மணவாளக்குறிச்சி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புவனேந்திரன், ஜாக் குளச்சல் கிளைத் தலைவர் ஹபீப் பிர்தௌசி, தமுமுக, இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டை இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
















No comments